கக்கன் பிறந்தநாள்: மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் அமைச்சா் கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் அவரது படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சா் கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் அவரது படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிஉறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கக்கன் படத்துக்கு விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், நாகா்கோவில் நகரத் தலைவா் அலெக்ஸ், நிா்வாகிகள் ஜெரால்ட் கென்னடி, முருகானந்தம், காமராஜ், சிவபிரபு, டைசன். சி.எல். ஜோ, அந்தோணி முத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.