கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே மது விற்றவா் கைது

DIN

மாா்த்தாண்டம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

தோ்தலையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் கஞ்சா , சட்ட விரோத மது விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில்மாா்த்தாண்டத்தில் செயல்பட்டு வரும் தக்கலை மதுவிலக்குப் பிரிவு உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சுவாமியாா்மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றவரை பிடித்து விசாரித்தனா். அவா் அப்பகுதியைச் சோ்ந்த முத்தையன் மகன் தங்கராஜ் (58) என்பதும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT