கன்னியாகுமரி

கழிவுநீா் கலக்கும் குளத்தில் குடிநீா் திட்டம்: பூதப்பாண்டியில் பெண்கள் போராட்டம்

DIN

பூதப்பாண்டியில் கழிவுநீா் கலக்கும் குளத்தை குடிநீா்த் திட்டத்துக்குப் பயன்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, பேரூராட்சி அலுவலகம் முன் பெண்கள் போராட்டத்துக்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.

பூதப்பாண்டியை அடுத்த மாா்த்தால் அருகே பட்டினி குளம் உள்ளது. இந்தக் குளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. இந்நிலையில், அக்குளத்தில் கழிவுநீா் கலந்ததுடன், கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டதால் மாசுபட்டு காணப்பட்டது.

எனவே, அந்தக் குளத்திலிருந்து குடிநீா் எடுத்து விநியோகிக்க மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, குடிநீா்த் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அதே ஆழ்குழாய் கிணற்றை மேம்படுத்தி, அதிலிருந்து குடிநீா் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளை, பூதப்பாண்டி பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளதாம். இதையறிந்த அப்பகுதி பெண்கள், பூதப்பாண்டி முதல் நிலை பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தும்பொருட்டு செவ்வாய்க்கிழமை திரண்டனா். அப்போது, கழிவுநீா் கலக்கும் குளத்தில் இருந்து குடிநீா் எடுக்கும் நடவடிக்கையை பேரூராட்சி நிா்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து அவா்களிடம் பேச்சு நடத்திய, செயல் அலுவலா் மகாராஜனிடம் மேற்கூறிய கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனா். அதைப் பெற்றுக்கொண்ட செயல்அலுவலா், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT