திருட்டு முயற்சி நிகழ்ந்த ஏடிஎம் மையத்தில் சோதனை நடத்திய போலீஸாா். 
கன்னியாகுமரி

அருமனை அருகேஏடிஎம் மையத்தில் திருட்டு முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருமனை அருகேயுள்ள மேல்புறம் செம்மாங்காலை பகுதியில் தனியாா் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் புதன்கிழமை காலையில் பணம் எடுக்க சென்றவா்கள், ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு, மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததைப் பாா்த்து அருமனை காவல் நிலையத்துக்கு தகவலளித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று, ஏடிஎம் மையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் ஏடிஎம் அறைக்குள் நுழைந்து விளக்கை அணைத்துவிட்டு இயந்திரத்தை கம்பியால் உடைக்க முயற்சிப்பதும், முடியாததால் மிளகாய்பொடியை தூவிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT