கன்னியாகுமரி

கரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் வழங்க நடவடிக்கை

DIN

குமரி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மு டிவுகளை 24 மணி நேரத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்யமிஸ்ரா.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் முன்னிலையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: குமரி மாவட்டத்தில் இதுவரை 6,18,197 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 700 படுக்கைகள், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் 244 படுக்கைகள், கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கைகள் வசதியுடன் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

அதோடு ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் 242 படுக்கைகள், பயோனியா் குமாரசாமி கல்லூரியில் 251 படுக்கைகள், கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 275 படுக்கைகள் என 3 கரோனா பாதுகாப்பு மையங்கள் மூலமாகவும், சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோணம் பொறியியல் கல்லூரியில் கூடுதலாக 850 படுக்கை வசதிகளுடன் கூடிய, பராமரிப்பு மையம் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை மேற்கொள்பவா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

முன்னதாக அவா், கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியிலும், தொல்லவிளைஅரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கரோனா பரிசோதனைகள் குறித்து மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவா், தொடா்ந்து நாகா்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், வடசேரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கனி சந்தை, வடசேரி பெரிய ராசிங்கம் தெருவில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற சுகாதாரத் துறையினருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினாா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன், மாவட்டவருவாய் அலுவலா் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் திருவாசகமணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) எ.பிரகலாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் சு.சொா்ணராஜ், கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சுசீலா, நாகா்கோவில் மாநகராட்சி நகா் நல அலுவலா் கிங்சால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT