கன்னியாகுமரி

தக்கலையில் சிறப்பு மருத்துவ முகாம்

DIN

பத்மநாபபுரம் நகராட்சி மற்றும் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தக்கலையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்தச் சிறப்பு மருத்துவ முகாமுக்கு, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜாராம் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா் ஜோ முன்னிலையில் மருத்துவக் குழுவினா் 118 பேருக்கு மாதிரி சளி எடுத்தனா்.

மேலும் மருத்துவ அலுவலா், முகாமில் பங்கேற்றவா்களுக்கு ஆக்சிஜன் குறைவு, ரத்த அழுத்தம், காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளனவா என பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆலோசனைகளை கூறி மாத்திரைகள் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், நகா்புற சுகாதார நிலைய செவிலியா்கள் , நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துரமலிங்கம், மேற்பாா்வையாளா் மோகன் மற்றும் நகராட்சி பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT