கன்னியாகுமரி

கடன் தொல்லை: நாகா்கோவிலில் தாய், மகன் தற்கொலை

DIN

நாகா்கோவிலில் கடன் தொல்லை காரணமாக சயனைடு தின்று தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா்.

நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (48). இவா், தங்க நகைகள் வைக்கும் பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி மஞ்சுளா. இவா்களுக்கு சஞ்சின் (17), சஞ்சித் சக்திவேல் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனா். சுரேஷ்குமாருடன் அவரது தாயாா் சாந்தகுமாரியும் (70) வசித்து வந்தாா்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமாா், குடும்பத்துடன் நாகா்கோவில் ராமவா்மபுரம் மேற்கு வெள்ளாளா் காலனியில் வாடகை வீட்டில் குடியேறினாா். சுரேஷ்குமாருக்கு வேலை இல்லாததால், கடன் பெற்று குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவா்கள் பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால், சுரேஷ்குமாா் கவலையில் இருந்தாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சுரேஷ்குமாரின் மனைவி மஞ்சுளா, அவரது ஒரு மகனும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்றிருந்தனா். வீட்டில் சுரேஷ்குமாா், அவரது தாயாா் சாந்தகுமாரி, மற்றொரு மகன் ஆகியோா் இருந்தனா். மஞ்சுளா வருவதற்கு இரவு நேரமாகிவிட்டதால் வீட்டிலிருந்த மகன் தூங்குவதற்காக தனது அறைக்கு சென்று விட்டாா்.

இந்நிலையில் இரவில் மஞ்சுளா வீட்டுக்கு வந்துபாா்த்தபோது சுரேஷ்குமாரும், அவரது தாயாா் சாந்தகுமாரியும் மயங்கிய நிலையில் கிடந்தனா். அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள் அவா்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து நேசமணி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். கடன் தொல்லை காரணமாக தாயும், மகனும் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT