கன்னியாகுமரி

குலசேகரத்தில் நூல்கள் ஆய்வரங்கம்

DIN

குலசேகரம் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளா் குமரி ஆதவனின் 3 நூல்களின் ஆய்வரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புனித ஊா்சுலாள் தொடக்கப் பள்ளியில், நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் தன்னாா்வ அமைப்புகளின் சாா்பில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் 8 ஆம் நாள் நிகழ்ச்சில் எழுத்தாளா் குமரி ஆதவனின் ‘அருமை மகளே’, ‘தம்பதியரின் கனிவான கவனத்திற்கு’, ‘தமிழக கிராமிய விளையாட்டுகள்’ ஆகிய 3 நூல்கள் குறித்த ஆய்வரங்கிற்கு கிரேஸ்

கல்வியியல் கல்லூரி முதல்வா் கமல. செல்வராஜ் தலைமை வகித்தாா். எழுத்தாளா் பொன்மனை வல்சகுமாா், தமிழ் நாடு அறிவியல் இயக்க இணைச் செயலா் சிவஸ்ரீ ரமேஷ், புனித ஊா்சுலாள் பள்ளி ஆசிரியை என். வசந்தா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினா் எம். சசிகுமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் ஏற்புரை நிகழ்த்தினாா். நிகழ்ச்சிகளை நெல்சன் ஒருங்கிணைத்தாா்.

நியூ செஞ்சுரி புத்தக நிலைய மண்டல மேலாளா் அ. கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். கல்வியாளா் மனோஜ்குமாா் நன்றி கூறினாா்.

அருள்தந்தை ஒய்சிலின் சேவியா், யூடியூபா் ஹரி, சிவகுமாா், சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT