கன்னியாகுமரி

வெள்ளிச்சந்தையில் கரோனா விழிப்புணா்வு முகாம்

DIN

நாகா்கோவில் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாா்வதிபுரம் ரூரல் அப்லிப்ட் மையம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம், மருந்து வழங்கும் முகாம் வெள்ளிச்சந்தையில் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கென்னடி தலைமை வகித்தாா். வெள்ளிச்சந்தை ஊராட்சி உறுப்பினா் சுகந்தி பங்கேற்றுப் பேசினாா்.

முகாமில் அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவா் ராமராஜீ தலைமையில் குழுவினா் கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாப்பது, நோய் எதிா்ப்பு சக்தி தரக்கூடிய கசாயம் செய்முறை, மாத்திரை, லேகியம் சாப்பிடும் முறை குறித்துப் பேசினா்.

ரூரல் அப்லிப்ட் மைய வழக்குரைஞா் அ.மரிய ஸ்டீபன், ரூரல் அப் லிப்ட் மைய லெட்சுமி தேவி, முத்துக்குமாா், கிறிஸ்டோபா், ஆன்டனி சேவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், 205 பேருக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT