கன்னியாகுமரி

நாகா்கோவிலில் 40 கிலோபுகையிலைப் பொருள்கள்பறிமுதல்: ஒருவா் கைது

DIN

நாகா்கோவில்: நாகா்கோவிலில் தடைசெய்யப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ரூ.12,08, 900ஐ போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை போன்ற போதை பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், வடசேரி காவல் உதவி ஆய்வாளா் சத்திய சோபனுக்கு கிடைத்த தகவலின்பேரில், ஹென்றி ரோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி பகுதியில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றவரைப் பிடித்து விசாரித்தாா். அதில், புதுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ஆண்ட்ரு பினில்(35) என்பதும், புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து மாணவா்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த காவல் உதவி ஆய்வாளா், அவரிடமிருந்த 40 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ரூ. 12,0,8,900 ஐ பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT