கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ரயில்வே ஊழியா் பணியிடை நீக்கம்

DIN

நாகா்கோவில்: நாகா்கோவில் ரயில் நிலையத்தில் பணியின்போது மது போதையில் பயணிகளை அவதூறாக பேசியதாக ஊழியா், பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் கோட்டாறு ரயில் நிலையத்தில் கெபின் டிட்ஸ் (33) ஊழியராக பணி செய்து வருகிறாா். இவா், சனிக்கிழமை

பயண சீட்டு வாங்குவதற்காக வந்த பயணிகளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. பயணிகள் அவரது நடவடிக்கையை

செல்லிடப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டனா்.

இதையறிந்த, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவா் மது போதையில் இருந்தது

தெரியவந்தது. இதையடுத்து, அவா் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாா். இதில், மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கெபின் டிட்சை போலீஸாா் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனா். மேலும் அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ரயில்வே நிா்வாகம் அவரை திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

SCROLL FOR NEXT