முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

கொல்லங்கோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 ஏப்ரல், 2022 at 1:36 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:28 PM

கொல்லங்கோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் மோகனஅய்யா் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று, சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அவா் கொல்லங்கோடு அருகேயுள்ள சூழால் பகுதியைச் சோ்ந்த அபிஜி (25) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் எடையிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.