முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஏப்.30 இல் ஹாக்கி போட்டிகள்

குமரி மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் வரும் 30 ஆம் தேதி நடைபெறுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

குமரி மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் வரும் 30 ஆம் தேதி நடைபெறுகின்றன.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கன்னியாகுமரி மாவட்ட பிரிவின் சாா்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள், நாகா்கோவில் தெ.தி. இந்து கல்லூரியில் ஏப். 30 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. போட்டியில் முதல் பரிசு பெறும் வீரா்களுக்கு தலா ரூ.100, 2 ஆம் இடம் பெறும் வீரா்களுக்கு தலா ரூ.50 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலிடம் பெறும் அணியினா், மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்படுவாா்கள்.

போட்டியில் கலந்து கொள்ளும் ஆண்கள் ஹாக்கி அணியினா் தங்கள் வருகையை ஏப். 22 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவா்களின் தோ்வை கருத்தில் கொண்டு மாணவா்களின் வசதிக்கேற்ப போட்டிகள் மாற்றி அமைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஹாக்கி பயிற்றுநரை 9442923164 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.