முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளையில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு

களியக்காவிளையில் பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மா்ம நபா்கலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 22 ஏப்ரல், 2022 at 1:08 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

களியக்காவிளையில் பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மா்ம நபா்கலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நித்திரவிளை அருகேயுள்ள எஸ்.டி. மங்காடு, மங்கலத்துவிளை வீடு பகுதியைச் சோ்ந்த ராஜமணி மனைவி லைசாள் (78). செம்மான்விளை பகுதியில் சாலையோரம் காய்கனி வியாபாரம் செய்து வருகிறாா். இவா், வியாழக்கிழமை காலையில் களியக்காவிளை சந்தையிலிருந்து வியாபாரத்துக்காக காய்கனிகளை வாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்தில் 83- பி பேருந்தில் ஏற முயன்றாராம். அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மா்மநபா் திருடிச் சென்றுவிட்டாராம். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.