கன்னியாகுமரி

14 கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதிகளிலுள்ள வணிக வளாகங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளனவா என நகராட்சி அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டதில் 14 கடைகளிலிருந்து 45 கிலோ பிளாஸ்டிக் பைகைகளை பறிமுதல் செய்தனா்.

நகராட்சி ஆணையா் காஞ்சனா உத்தரவின் பேரில் சுகாதார அலுவலா் ராஜாராம், சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் மற்றும் பணியாளா்கள், நகராட்சிக்கு உள்பட்ட பேருந்து நிலையம், பிரதான சாலைகளிலுள்ள 60 வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் 14 கடைகளில் இருந்து 45 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து அக்கடை உரிமையாளா்களிடம் இருந்து மொத்தம் ரூ. 35,700 அபராதம் வசூலித்தனா்.

அபராதம்: பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் அருள்சோபன் அளித்த தகவலின் அடிப்படையில் தக்கலை இன்ஸ்பெக்டா் நெப்போலியன், நகராட்சி சுகாதார அலுவலா் ராஜாராம், ஆய்வாளா் முத்துராமலிங்கம் மற்றும் போலீஸாா், தக்கலையில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனா். அப்போது கேரளத்தில் இருந்து வந்த இரு லாரிகளை சோதனை செய்தபோது கழிவுப் பொருள்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி அலுவலா்கள், இரு லாரிகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனா். பின்னா் இரண்டு லாரிகளும் கேரள மாநிலத்திற்கு திருப்பிஅனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT