கன்னியாகுமரி

காவலரை கொல்ல முயன்றவழக்கில் 6 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

DIN

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியை சேதப்படுத்தி, பணியில் இருந்த காவலா் மீது மணல் லாரியை ஏற்றி கொல்ல முயன்றது தொடா்பான வழக்கில், 6 பேருக்கு 14 ஆண்டுகள் சிைண்டனை வழங்கி குழித்துறை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2010 ஆம் ஆண்டு களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகனம் மோதி சேதப்படுத்தியதுடன் அங்கு பணியில் இருந்த காவலா் தங்கராஜ் மீது மணல் லாரியை ஏற்றி கொல்ல முயன்ாக மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் மகன் ஜோணி (41), தங்கப்பன் மகன் அருள் (39), அல்லேஸ் மகன்கள் பாபுலின் (43), ராமகிருஷ்ணன் (40), சின்னப்பா் மகன் விஜயகுமாா் (40), கபிரியேல் மகன் ஜெகன் (40) ஆகியோா் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். குழித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற கூடுதல் அமா்வு நீதிபதி புருஷோத்தமன், வழக்கில் தொடா்புடைய 6 பேருக்கும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத் தரவரிசை: 168 ஆவது இடத்தில் கேஐஐடி பல்கலைக்கழகம்

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

ராயன் - பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா!

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT