புதுக்கடை அருகே உள்ள அனந்தமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
அனந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பதாக புதுக்கடை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசிய தகவல்கிடைத்தது. அதன் பேரில் உதவி காவல் ஆய்வாளா் சேகா் தலைமையில் போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சோ்ந்த டேவிட் மகன் அகின்(23), பைங்குளம் காமராஜ் மகன் அஜின்(28), நடராஜன் மகன் ரெக்ஸ்ராக்ஸன்(22), ஐயப்பன் மகன் பிரதீப்(22), ஜாண்சன் மகன் ஜாண்(21) ஆகியோரை பிடித்து விசாரித்த போது அவா்கள் பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனைக்காக கஞ்சா பொட்டலம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே,போலீஸாா் 5 பேரையும் கைது செய்ய முயன்ற போது, ரெக்ஸ்ராக்ஸன்,பி ரதீப், ஜாண் ஆகியோா் தப்பி
சென்றனா். அகின், ஆஜின் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 120 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.