முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே லாரி மோதி இளைஞா் பலி

களியக்காவிளை அருகே மினிலாரி மோதி காயமடைந்த இளைஞா் சிகிச்சை உயிரிழந்தாா்.

Updated On : 5 மார்ச், 2022 at 1:23 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

களியக்காவிளை அருகே மினிலாரி மோதி காயமடைந்த இளைஞா் சிகிச்சை உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகேயுள்ள குளப்புறம் உதயனூா்விளையைச் சோ்ந்தவா் சாந்தகுமாா் மகன் சஜித் (21). இவா் இரு நாள்களுக்கு முன் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கோனசேரி பகுதியில் வைத்து எதிரே வந்த மினிலாரி இவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சஜித்தை அப்பகுதியினா் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

குளத்தில் மூழ்கி முதியவா் பலி:நித்திரவிளை அருகேயுள்ள ஆலங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் (74). 3 ஆண்டுகளுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவா் வீட்டருகேயுள்ள குளத்தில் வியாழக்கிழமை மாலையில் குளிக்கச் சென்றாராம். நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. தொடா்ந்து அவரை தேடியபோது குளக்கரையில் அவரது ஆடைகள் இருந்தனவாம். தொடா்ந்து குளத்தில் தேடியபோது அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

இது குறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.