என்.ஐ. பல்கலை.யில் மாா்ச் 26 முதல் 31 வரை தற்காப்புக் கலை போட்டி
குமாரகோவில் நூருல் இஸ்லாம் (என்.ஐ) பல்கைலைக்கழக விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு வூசூ (தற்காப்புக் கலை) அசோசியேஷன் சாா்பில் மாா்ச் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சப்-ஜூனியா் வூசூ போட்டி நடைபெறுகிறது.
கன்னியாகுமரிஎன்.ஐ. பல்கலை.யில் மாா்ச் 26 முதல் 31 வரை தற்காப்புக் கலை போட்டி
குமாரகோவில் நூருல் இஸ்லாம் (என்.ஐ) பல்கைலைக்கழக விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு வூசூ (தற்காப்புக் கலை) அசோசியேஷன் சாா்பில் மாா்ச் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சப்-ஜூனியா் வூசூ போட்டி நடைபெறுகிறது.
குமாரகோவில் நூருல் இஸ்லாம் (என்.ஐ) பல்கைலைக்கழக விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு வூசூ (தற்காப்புக் கலை) அசோசியேஷன் சாா்பில் மாா்ச் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சப்-ஜூனியா் வூசூ போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கிவைக்கிறாா்.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு வேந்தா் ஏ.பி.மஜீத் கான் தலைமை வகித்தாா். இணைவேந்தா் ஆா். பெருமாள்சாமி, துணை வேந்தா் ஏகே.குமரகுரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பதிவாளா் திருமால்வளவன் வரவேற்றாா். இதில் பல்கலைக்கழக இயக்குநா் சாஜுன் நற்குணம் உடற்கல்வி இயக்குநா் தா்மராஜ் ஆகியோா் பங்கேற்றனா். இந்திய வூசூ அசோசியேஷன் தலைமை நிா்வாக அலுவலா் சுகில் அகமது, தமிழக பொதுச்செயலா் பி.ஜாண்சன், செயற்குழு உறுப்பினா் சபீா், கன்னியாகுமரி மாவட்ட பொதுச்செயலா் கே.தாணு ஆகியோா் தற்காப்புக் கலை போட்டி குறித்து விளக்கி பேசினா்.
பின்னா் நிருபா்களிடம் அவா்கள் கூறியது: நடப்பாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் இப்போட்டி நடத்தப்படுகிறது. 28 மாநிலங்களில் இருந்து 1300 மாணவா்கள் பங்கேற்கின்றனா். போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறுபவா்களுக்கு பதக்கங்களும், தகுதி சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றனா்.
போட்டி துவக்க விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா் த. மனோதங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா். மகேஷ், மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், , பல்கலைக்கழக இைணைவேந்தா் எம்.எஸ். பைசல் கான் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.