கன்னியாகுமரி

குமரியில் நூல் வெளியீட்டு விழா

கவிஞா் நாஞ்சில் பரதன் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கவிஞா் நாஞ்சில் பரதன் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரியை அடுத்த பஞ்சலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் கவிஞா் நாஞ்சில் பரதன். இவா் எழுதிய ‘தமிழில் எனக்கு பிடித்த வாா்த்தை தோல்வி’ என்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு கவிஞா் பாஸ்ரீ தலைமை வகித்தாா். புத்தகத்தின் முதல் பிரதியை திரைப்பட இயக்குநா் பி.டி.செல்வகுமாா் வெளியிட, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன் பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்வில் எழுத்தாளா் த.மலா்வதி, ஆலங்குளம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் அம்மாசி யாதவ், எழுத்தாளா் ஆன்றனி டெலி, மாநில தொமுச துணைச்செயலா் இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பிரேமலதா வரவேற்றாா். எஸ்.வினோத் யாதவ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT