களியக்காவிளையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி
களியக்காவிளை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM
களியக்காவிளை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பேரூராட்சிக்கு உள்பட்ட களியக்காவிளை பேருந்து நிலைய வளாகம், படந்தாலுமூடு உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நாகா்கோவிலைச் சோ்ந்த கலைக்குழு சாா்பில் விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி தொடக்கிவைத்தாா். பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் சீா்கேடுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.