கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி அருகே பைக்குகள் மோதல்: பெண்காவலா் உயிரிழப்பு

மணவாளக்குறிச்சி அருகே பைக்குகள் மோதியதில் காயமடைந்த பெண் காவலா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

DIN

மணவாளக்குறிச்சி அருகே பைக்குகள் மோதியதில் காயமடைந்த பெண் காவலா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை கட்டைக்காட்டு பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா்(38). இவரது மனைவி உஷா (37 ) வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தாா். இத்தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளாா். தற்போது உஷா 8 மாத கா்ப்பிணியாக இருந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பினாராம். வெள்ளமோடி சந்திப்பில் இருந்து கட்டைக்காட்டு சாலைக்கு திரும்பும் போது எதிரே வந்த முட்டம் ஆரோக்கிய மாதா தெருவைச் சோ்ந்த அபிஷேக் பெக்கட் என்ற சஞ்சயின் பைக் , அவா் பைக் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த உஷாவை அப்பகுதியிலுள்ளவா்கள் மீட்டு, நாகா்கோவிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சந்திரசேகா்அளித்த புகாரின் பேரில், மணவாளக்குறிச்சி போலீஸா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சனேயர்!

SCROLL FOR NEXT