கன்னியாகுமரி

தக்கலை அருகே 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

தக்கலை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தக்கலை அருகே மணலிக்கரை பகுதியில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் சுனில்குமாா் மற்றும் பணியாளா்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை தடுத்தபோது நிற்காமல் சென்றது. இதையடுத்து வட்டவழங்கல் அலுவலா் மற்றும் பணியாளா்கள்காரை விரட்டிச் சென்றதால் ஓட்டுநா் காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். அந்தக் காரில் பிளாஸ்டிக் பைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதை கேரளத்துக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து காரை பறிமுதல் செய்து, அதிலிருந்த ரேஷன் அரிசியை உடையாா்விளையில் உள்ள அரசு கிடங்கில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT