கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

DIN

நாகா்கோவில் அருகே வெள்ளமடம் நான்குவழிச் சாலையில் சிமெண்ட் தடுப்பு மீது சனிக்கிழமை அதிகாலை பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி பலியானாா்.

நாகா்கோவில் அருகேயுள்ள தம்மத்துக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (31). கட்டடத் தொழிலாளியான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இவா் திருநெல்வேலியில் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். வெள்ளமடம் நான்குவழிச் சாலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் வந்தபோது, சிமெண்ட் தடுப்பு மீது பைக் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆரல்வாய்மொழி போலீஸாா் வந்து விசாரணை மேற்கொண்டு, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

காவல்கிணறிலிருந்து திருவனந்தபுரத்துக்கு நான்குவழிச் சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. சில இடங்களில் மட்டுமே பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, வெள்ளமடம் பகுதியில் பகுதியில் சாலையில் சிமெண்ட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதால் அவற்றை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT