கன்னியாகுமரி

களியக்காவிளையில் கழிவுநீா் குழாய்களை அடைக்கும் பணி தீவிரம்

DIN

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில், சுகாதார விதிகளை மீறி பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் குழாய்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அடைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வீடுகளிலிருந்து வரும் கழிவு நீரை பொது இடங்களில் விட வேண்டாம் என ஆட்சியா் அறிவுறுத்தியிருந்தாா். இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள் களியக்காவிளை சந்தை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது பொது இடங்களில் கழிநீரை வெளியேற்றும் குழாய்களை பொக்லைன் இயந்திரம் மூலம் கண்டறிந்து, அவற்றை கான்கிரீட் கலவை மூலம் அடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அடைக்கப்பட்ட குழாய்களை திறந்து பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT