விளையாட்டுத் துறையில் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்க வலியுறுத்தி, கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு- காஷ்மீருக்கு இளைஞா்கள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பைக் பயணத்தைத் தொடங்கினா்.
மத்திய பிரதேச மாநிலம், குவாலியா் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறன் இளைஞா்கள் சத்யேந்திரசிங் (35), பிரமோத்தனிலே (36) ஆகிய இருவரும் இந்த விழிப்புணா்வுப் பயணத்தை தொடங்கினா்.
கன்னியாகுமரியிலிருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக 18 நாள்களில் 3,550 கி.மீ. தொலைவு பயணித்து ஜம்மு- காஷ்மீரில் நிறைவு செய்கின்றனா்.
இப்பயணத்தை நாகா்கோவில் கோட்டாட்சியா் சேதுராமலிங்கம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். இதில், பேரூராட்சி உறுப்பினா்கள் பூலோகராஜா, இக்பால், முன்னாள் உறுப்பினா் டி.தாமஸ், திமுக நிா்வாகிகள் பி.ஆனந்த், எஸ்.அன்பழகன், நிசாா், சகாய ஆன்றனி, நாஞ்சில் மைக்கேல், பிரைட்டன், ரூபின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.