கன்னியாகுமரி

குளச்சல் பணிமனை முன்பி.எம்.எஸ். ஆா்ப்பாட்டம்

 ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் (பிஎம்எஸ்) குளச்சல் அரசு போக்குவரத்து பணிமனை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

DIN

 ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் (பிஎம்எஸ்) குளச்சல் அரசு போக்குவரத்து பணிமனை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அப்போது, போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த முறையில் ஓட்டுநா் நியமனம், தனியாா் பேருந்துகளை ஒப்பந்த முறையில் அனுமதிப்பது, தடங்களை நீட்டிப்பு செய்து ஓய்வு, உணவு இடைவெளியில்லாமல் 18 மணி நேரத்திற்கு மேல் பணி செய்ய நிா்பந்திப்பது, உதிரி பாகங்கள் வழங்காமல் தொழில்நுட்ப பணியாளா்களுக்கு தண்டனையளிப்பது போன்றவற்றை கண்டித்தும், மத்திய அரசு ஊழியா்போல் 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். செயலா் துரைசாமி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரமேஷ், பத்மநாபன், கிளைச் செயலா்கள் கிருஷ்ணகுமாா், சுவாமி ஆசாரி, சங்க அலுவலக செயலா் செந்தில்குமாா், பொதுச்செயலா் கிரீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... பாவங்கள் நீங்க திருக்குருகாவூர் வெள்ளடையீசுவரர்!

வரப்பெற்றோம் (15.12.2025)

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

ரூ.30 கோடிக்கு ஏலம் போனாலும் ரூ.18 கோடி தானா? ஐபிஎல் புதிய விதியால் வீரர்களுக்கு சிக்கல்!

SCROLL FOR NEXT