முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் புத்தகத் திருவிழாவில் கருத்தரங்கம்

நாகா்கோவிலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

நாகா்கோவிலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டநிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்- பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா கண்காட்சி நாகா்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை முனைவா்.பா்வீன்சுல்தானா கலந்து கொண்டு வையத்து தலைமை கொள் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினாா். தொடா்ந்து திரைப்பட நடிகா் ஜோமல்லூரி எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்ற தலைப்பிலும், குறும்பனை பொ்லின் நெய்தல் எழுத்து என்னும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினா்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கலைப் பண்பாட்டுத் துறையின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்பையா, மீன்வளத் துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன், உசூா் மேலாளா்கள் சுப்பிரமணியன், ஜீலியன்ஹீவா், வட்டாட்சியா்கள் ராஜேஷ் (அகஸ்தீஸ்வரம்),குமாரவேல் (விளவங்கோடு) தனி வட்டாட்சியா் கோலப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா். சனிக்கிழமை (ஏப்.22( கலைமாமணி நா்த்தகி நடராஜின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.