நாகா்கோவிலில் நடைபெற்று வரும் புத்தகக் திருவிழாவில், முனைவா் நா்த்தகி நடராஜின் பரதநாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து நாவலாசிரியை மலா்வதி, வாழ்வியல் இலக்கியம் என்ற தலைப்பிலும், முனைவா் வி.ஆனந்த் புத்தகம் தரும் புத்தாக்கம் எழுத்து என்ற தலைப்பிலும், முனைவா் ஜேம்ஸ் ஆா்.டேனியல் உலக எழுத்தாளா்களுடன் உரையாடுகிறேன் என்ற தலைப்பிலும், குமரிஆதவன் குமரியின் முதல் தலைமுறை எழுத்து என்ற தலைப்பிலும் பேசினா்.
மாவட்ட வருவாய் அலுவலா்(தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) இரா.ரேவதி சிறப்புரையாற்றினாா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்பையா, மீன்வளத் துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன், உசூா் மேலாளா்கள் சுப்பிரமணியன், ஜீலியன் ஹீவா், வட்டாட்சியா்கள் என்.ஜெகதா (ரயில்வே நிலமெடுப்பு), லெ.முத்துலெட்சுமி (நகர நில வரித் திட்டம்), ராஜேஷ் (அகஸ்தீஸ்வரம்), குமாரவேல் (விளவங்கோடு) தனி வட்டாட்சியா் கோலப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) சங்கரின் சாதகப் பறவைகள் கானப்பிரியா மெல்லிசை சங்கமம் இன்னிசைக் கச்சேரி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.