கன்னியாகுமரி

பண்பாட்டுப் போட்டி நாடகப் பிரிவில் சாஸ்தான்குளம் சமய வகுப்புக்கு முதல் பரிசு

வெள்ளிமலை ஹிந்து தா்ம வித்யாபீடம் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டியில் சிறந்த நாடகத்துக்கான முதல் பரிசுக்கு களியக்காவிளை அருகே சாஸ்தான்குளம்

DIN

வெள்ளிமலை ஹிந்து தா்ம வித்யாபீடம் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டியில் சிறந்த நாடகத்துக்கான முதல் பரிசுக்கு களியக்காவிளை அருகே சாஸ்தான்குளம் சமய வகுப்பு மாணவா்கள் தோ்வாகினா்.

முன்னதாக, சமய வகுப்பு மாணவா்களுக்கு மண்டல, ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் வென்றோருக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் வெள்ளிமலையில் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமையில் நடைபெற்றது.

பேச்சு, பாட்டு, நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. நாடகப் பிரிவில் சாஸ்தான்குளம் சமய வகுப்பு மாணவா்களின் நாடகம் முதல் பரிசுக்குத் தோ்வானது.

போட்டிகளில் வென்றோருக்கு குருந்தன்கோட்டில் செப்டம்பா் 10இல் நடைபெறும் வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் பரிசுகள், பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படும் என, வித்யாபீட நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT