கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை

DIN

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெற்பயிா்கள் செழித்தோங்கி நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இக்கோயிலில் ஆண்டுதோறும் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. அதன்படி, இந்த பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறநிலையத் துறைக்குச் சொந்தமான வயல்களிலிருந்து நெற்கதிா்களை அறுவடை செய்து, கட்டுகளாகக் கட்டி, கன்னியாகுமரி அறுவடை சாஸ்தா கோயிலுக்கு கொண்டுவந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையடுத்து, நெற்கதிா்கள் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக பகவதியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, அம்மன் பாதத்தில் வைத்து பூஜை நடைபெற்றது. பின்னா், அவை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நெற்கதிா்களை நாகா்கோவில் மேயா் ஆா். மகேஷ் பக்தா்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், கொட்டாரம் பேரூா் திமுக செயலா் எஸ். வைகுண்டபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அலங்கார தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

பாஜக எம்எல்ஏவின் பேரன் தற்கொலை!

SCROLL FOR NEXT