கன்னியாகுமரி

திருவனந்தபுரம் - மங்களூரு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

DIN

திருவனந்தபுரம் - மங்களூரு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் எழுதியுள்ள கடித விவரம்: உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகிறாா்கள். அவா்களின் வசதிக்காக மங்களூரு மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவைகூட இல்லை.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், கா்நாடகத்தில் உள்ள கொல்லூா் மூகாம்பிகை கோயில், சிருங்கேரி சாரதா கோயில், தா்மஸ்தலா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறாா்கள். ஆனால் தற்போது இக்கோயில்களுக்கு கன்னியாகுமரியிலிருந்து ரயில் மூலம் செல்ல முடியாத நிலை உள்ளது.

திருவனந்தபுரம் -மங்களூரு இடையே தினமும் 3 இரவு நேர ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் வரை பேருந்தில் பயணம் செய்து,அங்கிருந்து ரயிலில் பயணம் செய்கின்றனா். இந்த 3 ரயில்களில் திருவனந்தபுரம் - மங்களூரு விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு இரவு 7 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வகையிலும், சூரிய உதயத்தை காண்பதற்கு வசதியாக காலை 6 மணிக்கு முன்பே கன்னியாகுமரி வந்து சேரும் வகையிலும் இந்த ரயில்கள் இயக்கப்படவேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

SCROLL FOR NEXT