கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட வனப் பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டதற்கு எதிா்ப்பு: பழங்குடி மக்கள் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானை, கன்னியாகுமரி மாவட்ட வனப் பகுதியில் விடப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பழங்குடியின மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா

DIN

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானை, கன்னியாகுமரி மாவட்ட வனப் பகுதியில் விடப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பழங்குடியின மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானை, அங்கிருந்து துரத்தப்பட்டு தமிழகப் பகுதியான தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்தது. இந்நிலையில், அந்த யானை கடந்த திங்கள்கிழமை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் மேல்கோதையாறு அருகே குட்டியாறு அணை வனப் பகுதியில் விடப்பட்டுள்ளது.

இதற்கு இங்குள்ள பழங்குடியின, மலையோரப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். அந்த யானை குட்டியாறு அணை வனப் பகுதியிலிருந்து கீழே இறங்கி பேச்சிப்பாறை அணையை ஒட்டிய பழங்குடிக் குடியிருப்புகள் அல்லது முத்துக்குழி வயல், பாலமோா், மாறாமலை பகுதிகளுக்கு வந்து தங்களை தொந்தரவு செய்யும் என அவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

ஆா்ப்பாட்டம்: இந்நிலையில், பேச்சிப்பாறை அருகே தச்சமலை பழங்குடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் சிலா் செவ்வாய்க்கிழமை காலை தச்சமலை அரசுப் பள்ளி அருகே வந்து ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT