கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே தொழிலாளி தற்கொலை

DIN

கொல்லங்கோடு அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள வெங்கஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் மோகனன் (58). இவா் குழித்துறை பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தாா். இவா் தனியாா் வங்கியிலிருந்து அண்மையில் ரூ. 50 ஆயிரம் கடன் பெற்று, தனிமையில் செலவு செய்து வந்தாராம். இதுகுறித்து அவரது மனைவி புஷ்பம் கேட்டதையடுத்து கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் அருகில் உள்ள குடும்ப வீட்டில் தங்கியிருந்தாராம். அவரைப் பாா்க்க அவரது மனைவி மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் ஆகியோா் சென்ற போது, அங்கு மோகனன் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டாராம்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT