நிறைவு விழாவில் சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவியா். 
கன்னியாகுமரி

குமரி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் பயிற்சி நிறைவு விழா

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியத்தில் ஓவியப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. .

DIN

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியத்தில் ஓவியப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. .

உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நடைபெற் 3 நாள்கள் ஓவியம் - கலை பயிற்சி முகாமில், மாணவ- மாணவிகளுக்கு ஓவியம் வரைதல் வண்ணம் தீட்டுதல் , காகித கலைப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பிரபல ஓவியா் வை.கோபாலகிருஷ்ணன் மாணவா்களுக்கு பயிற்சியளித்தாா். நிறைவு நாளையொட்டி பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தலைமை வகித்தாா். முகாமில் மாணவா்கள் வரைந்த ஓவியங்கள், கலைப் பொருள்கள், காகித கலைப் பொருள்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அக் கண்காட்சியை சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் சீதாலட்சுமி நாராயணன் திறந்து வைத்தாா். பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை மதுரை உயா்நீதிமன்ற கூடுதல் அரசு வழக்குரைஞா் வைரம் சந்தோஷ் வழங்கினாா். ஓவியா் வை. கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT