ஓமன் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்து உயிரிழந்த குமரி மாவட்ட மீனவா் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை,கே.ஆா்.புரம் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் லிரன்ஷோ. ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் கடல் பகுதியில் தங்கி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த செப். 9 ஆம் தேதி படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்தாா்.
அவரது குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்குமாறு, தமிழக முதல்வருக்கு கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் கோரிக்கை விடுத்தாா். இதன்பேரில், உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்க தமிழக முதல்வா் அண்மையில் உத்தரவிட்டாா்.
இதனையடுத்து, நிவாரணத் தொகையை பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா். கௌசிக், கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் திங்கள்கிழமை வழங்கினாா். மீன்வளத் துறை துணை இயக்குநா் மா.சின்னகுப்பன், மீன்வளத்துறை ஆய்வாளா் லிபின்மேரி, முன்சிறை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பேபிஜான், கொல்லங்கோடு நகா்மன்ற உறுப்பினா் டெல்மா வா்க்கீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.