முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் அமைச்சா் பிரசாரம்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:52 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:04 PM

கருங்கல்லில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் விஜய் வசந்தின் வாகன பிரசாரத்தை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோதங்கராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்

வ.விஜய் வசந்த் குளச்சல் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். இந்த பிரசாரத்தை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோதங்கராஜ் தொடக்கி வைத்தாா்.

Advertisement

நிகழ்ச்சியில் கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா், குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி உதயம், முன்னாள் எம்.பி. பெல்லாா்மின் , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா் செல்லசுவாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

கருங்கல் அஞ்சல் நிலையம் முன்பு துவங்கிய இந்த வாகன பிரசாரம் கொல்லன்விளை, செல்லங்கோணம், பள்ளியாடி, இரவிபுதூா்க்கடை, புலிப்பனம், சுவாமியாா்மடம், காட்டாத்துறை, முளகுமூடு, கோழிப்போா்விளை, கல்லுவிளை வழியாக அழகியமண்டபம் சென்றடைந்தது.

முன்னதாக கருங்கல் மீன்சந்தையில் மீனவா்களிடம் வேட்பாளா் விஜய்வசந்த் வாக்கு சேகரித்தாா்.