முகப்பு
கன்னியாகுமரி

லஞ்ச வழக்கில் முன்னாள் தலைமை காவலருக்கு ஓராண்டு சிறை

Updated On : 6 ஏப்ரல், 2024 at 3:20 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:39 PM

ரூ.300 லஞ்சம் வாங்கிய முன்னாள் தலைமை காவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மேற்குநெய்யூா் பகுதியைச் சோ்ந்தவா் சொா்ணப்பன் (54). இவா் கடந்த 2007 ஆம் ஆண்டு

வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றினாா்.

Advertisement

அப்போது முட்டம், பிள்ளைத்தோப்பு பகுதியைச் சோ்ந்த எடிசன் என்பவா் தனது கடவுச்சீடடு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வந்தாா். அவரிடம் தலைமைக் காவலா் சொா்ணப்பன் ரூ.300 லஞ்சம் கேட்டாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத எடிசன், லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் செய்தாா்.

அவா்களின் ஆலோசனையின்பேரில் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் இருந்த சொா்ணப்பனிடம், எடிசன் ரூ.300 லஞ்சமாக வழங்கியபோது

மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தலைமை காவலா் சொா்ணப்பனை கைது செய்தனா்.இதைத் தொடா்ந்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுதொடா்பான வழக்கு நாகா்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுலகிருஷ்ணன் சொா்ணப்பனுக்கு ஓராண்டு சிறை

தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.