முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை சிறப்புப் பள்ளியில் பயிலரங்கு

ஹோம் அறிவுசாா் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளியில் வெள்ளிவிழா ஆண்டின் செயல் திட்டமாக கன்னியாகுமரி மாவட்ட சிறப்புப் பள்ளிப் பணியாளா்களுக்கான ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது.

Updated On : 14 ஏப்ரல், 2024 at 6:34 PM
பயிலரங்கில் பேசிய மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன்.
பகிர்:

குழித்துறையில் உள்ள, ஹோம் அறிவுசாா் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளியில் வெள்ளிவிழா ஆண்டின் செயல் திட்டமாக கன்னியாகுமரி மாவட்ட சிறப்புப் பள்ளிப் பணியாளா்களுக்கான ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது.

மாா்த்தாண்டம் மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் தலைமை வகித்து, பயிலரங்கைத் தொடக்கிவைத்தாா். அவா் பேசும்போது, சிறப்புக் குழந்தைகளை அன்புடன் கவனிக்கும் சிறப்பாசிரியா்கள் மிகவும் முக மலா்ச்சியுடன் காணப்படுவது இறைவன் கொடுத்த கொடை. எவ்வித பிரதிபலனும் பாராமல் செய்யும் தொண்டுக்கு ஏராளமான ஆசீா்வாதங்கள் உங்களது குடும்பங்களில் கிடைக்கட்டும் என்றாா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். சிவசங்கரன் சிறப்புரையாற்றினாா். சைக்கோதெரபிஸ்ட் லாரன்ஸ், இன்பென்ட் நடனப் பள்ளி இயக்குநா் அருள் ஆகியோா் பயிலரங்கை வழிநடத்தினா்.

Advertisement

நிறைவு விழாவில் மாா்த்தாண்டம் மறைமாவட்ட குருகுல முதல்வா் ஜோஸ்பிரைட், கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ் ஆகியோா் பேசினா்.

ஹோம் சிறப்புப் பள்ளித் தாளாளா் அஜீஷ்குமாா் வரவேற்றாா். சிறப்புப் பள்ளித் தலைமையாசிரியா் டென்னிஸ் நன்றி கூறினாா். சிறப்பாசிரியை அஜிதாகுமாரி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments