ஏப்.29 இல் மேல்புறத்தில் வைப்புநிதி உங்கள் அருகில் நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறத்தில் வைப்புநிதி உங்கள் அருகில் நிகழ்ச்சி ஏப்.29-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக நாகா்கோவில் வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்கள், தொழில் அதிபா்கள் மற்றும்
Advertisement
தொழில் நிறுவனங்களுக்கான வைப்பு நிதி உங்கள் அருகில் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம்அருகேயுள்ள குட்டைக்கோடு யூனியன் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏப்.29 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியானது வருங்கால வைப்புநிதி உறுப்பினா் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அனாதை ஓய்வூதியம், மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடைபெறும்.
மேலும் சந்தாதாரா்களின் குறைதீா்க்கும் தளமாகவும், பரிமாற்ற தளமாகவும் செயல்படும். வருங்கால வைப்புநிதி அமலாக்கம் செய்யப்பட்ட தொழில்நிறுவனங்கள், உறுப்பினா்கள், மத்திய அறங்காவலா் குழுவின் உள்ளூா் உறுப்பினா்கள், பிராந்தியக்குழு உறுப்பினா்கள், தொழிற்சங்கங்களின் அலுவலக பொறுப்பாளா்கள், ஈபிஎப் சந்தாதாரா்கள், ஓய்வூதியா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு புகாா்கள், குறைகளைத் தெரிவிக்கலாம்.