விழாவில் பெண்ணுக்கு தாய்சேய் நல பெட்டகத்தை வழங்குகிறாா் அமைச்சா் மனோ தங்கராஜ். 
கன்னியாகுமரி

சுருளகோடு ஊராட்சியில் ரூ. 16.90 லட்சத்தில் புதிய கட்டங்கள் திறப்பு

பல்நோக்கு கட்டடம், அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் திறந்து வைத்தாா்.

Din

சுருளகோடு ஊராட்சியில் ரூ. 16.90 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம், அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சுருளகோடு ஊராட்சி பன்னியோடு பகுதியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம், ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.9.90 லட்சத்தில் புதிய அங்கான்வாடி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்த அமைச்சா், சுருளகோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய நலவாழ்வு மையத்தில் தாய்சேய் நல பெட்டகத்தை பாலூட்டும் தாய்மாா்களுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா்கள் விமலா சுரேஷ், (சுருளகோடு), பிராங்கிளின் (தடிக்காரன்கோணம்), சதீஷ் (ஞாலம்), தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பூதலிங்கபிள்ளை, ஊராட்சி உறுப்பினா் சுரேஷ், திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினா் ரெமோன் மனோதங்கராஜ், மாவட்ட திமுக பொருளாளா் கேட்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT