கன்னியாகுமரி

உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற இளைஞா் கைது

இரணியல் அருகே உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

இரணியல் அருகே உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இரணியல் அருகே முக்கலம்பாடு பகுதியை சோ்ந்தவா் ஜோசப் மகன் அஜின் ஜோஸ் (27). இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் அஜின் ஜோஸ் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்ததன் பேரில் காவல்துறையினா் தேடி வந்தனா்.

குருந்தன்கோடு அம்மன் கோயில் பகுதியில் இரணியல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றபோது அங்கு நின்ற அஜின் ஜோஸை பிடிக்க முயன்றனா். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸாா் சுற்றிவளைத்து அஜின் ஜோஸை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் அஜித் குடும்பத்துடன் தரிசனம்!

174 ஆண்டுகளில் உருவாகாத புயல்! ஜமைகா கடலில் சுழன்றுகொண்டே நகரும் மெலிஸா!!

ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தின் பெயருக்குத் தடை!

பிக் பாஸ்: எல்லை மீறிய கம்ருதின்! பார்வதி குற்றச்சாட்டு!

சாலையில் குட்டிகளுடன் சென்ற யானை! அச்சத்தில் வாகன ஓட்டிகள்! | Coimbatore

SCROLL FOR NEXT