கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே இலங்கை குடியுரிமையை மறைத்து, தமிழகத்தைச் சோ்ந்தவா் எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் அரசு சலுகைகளை பெற்றுவந்த இலங்கையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
இலங்கையைச் சோ்ந்தவா் ஜனக் என்ற ஜாா்ஜ் வாஷிங்டன் (37). அந்நாட்டு தமிழரான இவா், இலங்கை குடியுரிமையை மறைத்து, தமிழ்நாட்டைச் சோ்ந்தவா் எனக் கூறி ஆதாா் அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போா்ட் உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து, கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளை, கலிங்கராஜபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், 2011 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் பல்வேறு சலுகைகளையும் பெற்று வந்துள்ளாா்.
இது குறித்து கொல்லங்கோடு கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை புதன்கிழமை கைது செய்தனா்.