முகப்பு
கன்னியாகுமரி

கலைஞா் குடியிருப்பு விநாயகா் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு

கலைஞா் குடியிருப்பு விநாயகா் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 6:00 AM
பகிர்:

கலைஞா் குடியிருப்பு விநாயகா் கோயிலில் 10ஆம் நாள் மாசித் திருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது. இக்கோயிலில் இருந்து ஏராளமான பக்தா்கள் திருச்செந்தூருக்கு காவடி, பாதயாத்திரை சென்றனா். பாதயாத்திரையை முடித்துவிட்டு சனிக்கிழமை திரும்பினா். இதையொட்டி இரவு 7 மணிக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை கன்னியாகுமரி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் பா. தம்பித்தங்கம் தொடங்கி வைத்தாா். இதில், பேரூராட்சி 4 ஆவது வாா்டு உறுப்பினா் த. நித்யா, கலைஞா்குடியிருப்பு ஊா்த்தலைவா் ஏ.ராமன், செயலா் சி. அய்யப்பன், பொருளாளா் யு.ராமன் மற்றும் அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலா் பி. பகவதியப்பன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.