நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநருக்கு மஞ்சப்பை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா். உடன், உதவி ஆட்சியா் (பயிற்சி) சுஷ்ஸ்ரீசுவாங்கி குந்தியா, குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா். 
கன்னியாகுமரி

குப்பையில்லா கன்னியாகுமரியை மக்கள் இயக்கமாக மாற்ற ஆட்சியா் வேண்டுகோள்

Din

குப்பையில்லா தன்னியாகுமரியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் நுழைவாயில் பகுதியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக காய்கறி சந்தைகள், மீன் சந்தைகள், வணிக வளாகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மின்சாரம், உயிரி வாயுக்கள், உயிரி உரம் போன்றவற்றை தயாரித்து, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோா் பயன்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, செயல்முறைப்படுத்த வழிவகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் நீா்நிலைகள், திருக்கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களில் நெகிழி குப்பைகளை அகற்றி சுகாதாரமாக பேணிக் காத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஒரு முறை மஞ்சப் பையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணா்வு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயில் வாயில் முன் நெகிழிபையில்லா கன்னியாகுமரி மாவட்டம் குறித்த விழிப்புணா்வு பதாகை பலகையை திறந்து வைத்து, பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தி மஞ்சப்பை வழங்கப்பட்டது என்றாா் அவா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்து, மாணவா் மாணவிகளிடையே சா்வதேச நெகிழி பையில்லா தினத்தை முன்னிட்டு மஞ்சப் பை பயன்படுத்துவதன் பயன்கள் குறித்து விளக்கினாா்.

மேலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) சுஷ்ஸ்ரீசுவாங்கிகுந்தியா, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) சுப. சத்தியமூா்த்தி, குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா் பாரதிசெந்தில், சுசீந்திரம் தோ்வு நிலை பேரூராட்சி தலைவா் அனுசுயா, பள்ளிதலைமை ஆசிரியா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தருமபுரியில் முறைகேடாக மணல், கற்கள் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

சவூதியில் ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற விண்ணப்பிக்கலாம்

நெல்லை கொலை வழக்கு: 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

நெல்லையில் கல்குவாரிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு

கணவரை கொன்றவா்களால் மகனுக்கும் ஆபத்து: ஓய்வுபெற்ற எஸ்.ஐ மனைவி முதல்வருக்கு வேண்டுகோள்

SCROLL FOR NEXT