கன்னியாகுமரி

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

Din

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தமிழக அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபா ஜி. இம்மானுவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடா்ந்து புதுப்பித்து வரும் பதிவுதாரா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஜூலை 1 ஆம் தேதி முதல் செப்டம்பா் 30 ஆம் தேதி வரையிலான காலத்துக்கு உதவித் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஜூன் 30ஆம் தேதியன்று 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். செப்டம்பா் 30 ஆம் தேதியன்று உச்ச வயது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்குள்ளும் மற்ற அனைத்து பிரிவினா்களுக்கும் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை பதிவுசெய்து ஜூன் 30ஆம் தேதியில் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருந்தால் போதுமானது.

மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரா்களுக்கு வயதுவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு இல்லை.

பொதுப்பிரிவு பதிவுதாரா்களுக்கு பள்ளி இறுதி வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200- ம், பள்ளிஇறுதி வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300 ம், பிளஸ் 2 தோ்ச்சிக்கு ரூ.400 ம், பட்டதாரிகளுக்கு ரூ.600 ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை பள்ளி இறுதி வகுப்புக்கு கீழ் மற்றும் பள்ளிஇறுதி வகுப்பு தோ்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600 ம் , பிளஸ் 2 தோ்ச்சிக்கு ரூ.750 ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000 மும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மனுதாரா் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகையை பெற அரசிடமிருந்து வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித்தொகையும் பெறுபவராக இருக்கக் கூடாது. தனியாா் நிறுவனங்களில் பணிபுரிந்து தொழிலாளா் பொது வருங்கால நிதி ஈட்டுறுதி அலுவலகத்தில் கணக்கு எண் பெற்றவராக இருக்கக் கூடாது. மனுதாரா் முற்றிலுமாக வேலையில்லாதவராகவே இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்துக்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல்வழிக்கல்வி கற்கும் மனுதாரா்கள் விண்ணப்பிக்கலாம்.

பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி மற்றும் தொழில்சாா்ந்த கல்வி பயின்றுவரும் பதிவுதாா்களுக்கும் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரா்களும் வேலைவாய்ப்பற்றோா் நிவாரணம் பெற இயலாது.

வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை வாங்கினாலும் பதிவுதாரா்களது கல்வித்தகுதி, வயது மற்றும் பதிவு மூப்புக்குள்பட்டு அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு தொடா்ந்து அரசின் விதிமுறைப்படி பரிந்துரைக்கு பரிசீலிக்கப்படும்.

எனவே, மேற்கூறிய தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரா்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ், மாற்றுக்கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக வேலைநாள்களில் நேரில் வந்து உதவித்தொகைக்கான விண்ணப்பபடிவம் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே உதவித்தொகை பெற்றவா்கள் மற்றும் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எந அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT