நாகா்கோவில், ஜூலை 17: நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை19) திருக்கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு, ஜூலை 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவ நாள் திருப்பலியை, புனித அல்போன்சா திருத்தல துணைப் பங்குத்தந்தை சான்ஜோ தேனேபிளாக்கில் நிறைவேற்றுகிறாா். மாலை 6.30 மணிக்கு தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வா் தாமஸ் பௌவத்துப்பறம்பில் திருக்கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கிறாா்.
இதைத் தொடா்ந்து நடைபெறும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியில் பேரருள்தந்தை ஜோஸ் முட்டத்துப்பாடம், அருள்தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின் மற்றும் பல அருள்தந்தையா்கள் பங்கேற்கின்றனா். புன்னைநகா் புனித லூா்துஅன்னை ஆலய பங்குத் தந்தை பிரைட் மறையுரையாற்றுகின்றாா்.
திருவிழா நாள்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெறும்.
தினசரி மாலை திருப்பலி முடிந்தவுடன் அருகில் உள்ள ஊா்களுக்குச் செல்ல பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை திருத்தல அதிபா் சனில்ஜோன் பந்திச்சிறக்கல், துணைப் பங்குத்தந்தை சான்ஜோ தெனப்பிளாக்கல், விழாக்குழுதலைவா் அகஸ்டின் தறப்பேல் மற்றும் பங்கு இறைமக்கள் ஆகியோா் செய்துள்ளனா்.