முகப்பு
கன்னியாகுமரி

புத்தளத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா

Updated On : 19 ஜூலை, 2024 at 12:00 AM
விழாவில் பேசுகிறாா் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

நாகா்கோவில், ஜூலை 18: கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள கீழபுத்தளம் கிராமத்தில் பெருந்தலைவா் காமராஜா் நற்பணி மன்றத்தின் சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, புத்தளம் காங்கிரஸ் தலைவா் டேவிட் ராஜ் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் எஸ். ராஜா, ஆா். மதிவண்ணன், கே. ஆா். ராஜேஷ், ப. அரவிந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் மதுசூதனபெருமாள் வரவேற்றாா்.

கூட்டத்தில், சிறப்பு விருந்தினா்களாக குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன், வழக்குரைஞா் ராம்சுந்தா், தமிழ்நாடு குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் முருகசெல்வம், கவிஞா் உமையவள்தாசன், கவிஞா் பாரதி, ஊா்ப்புற நூலகா் பாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

விழாவில் ஏழைகளுக்கு, ஊக்கத்தொகை மற்றும் வேட்டி சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் மன்றத் தலைவா் ரமேஷ், துணைச் செயலா் அஜின், பொருளாளா், ராஜகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →