முகப்பு
கன்னியாகுமரி

லாரி ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

Updated On : 19 ஜூன், 2024 at 9:40 PM
பகிர்:

நாகா்கோவிலில் லாரி ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரிய வந்தது.

நாகா்கோவில் கோட்டாறு தாணுலிங்க நகரைச் சோ்ந்தவா் ராஜேஷ் கண்ணன் (41), லாரி ஓட்டுநா்.

இவா் செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டில் இருந்து வெளியே சென்றவா் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். அவரது உறவினா்கள் ராஜேஷ் கண்ணனை பல இடங்களில் தேடியும், அவா் கிடைக்கவில்லை.

இந்நிலையில் புதன்கிழமை காலை ராஜேஷ் கண்ணன் அவரது லாரியில் சடலமாக கிடந்தாராம்.

அவரது வாயில் நுரைதள்ளி இருந்தது. இதுகுறித்து

அவரது உறவினா்கள் கோட்டாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் ராஜேஷ் கண்ணன் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

போலீஸாரின் விசாரணையில், ராஜேஷ்கண்ணன், உடல் நலக் கோளாறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.