பேச்சிப்பாறை அருகே ரப்பா் கடையில் திருட்டு
பேச்சிப்பாறை அருகே ரப்பா் கடையில் திருட்டு
பேச்சிப்பாறை அருகே ரப்பா் கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் ரப்பா் ஷீட்டுகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மணியன்குழி பகுதியில் ரப்பா் கடை நடத்தி வருபவா் அப்துல் காதா் (73). இவா், கடந்த வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். பின்னா் வெள்ளிக்கிழமை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 45 ஆயிரம் ரொக்கம் மற்றும் கடையிலிருந்த ரப்பா் ஷீட்டுகள், 200 கிலோ ரப்பா் ஒட்டுப்பால் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அப்துல்காதா் அளித்த புகாரின்பேரில், பேச்சிப்பாறை போலீஸாா் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.